தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ; த.மு.கூ வுக்கு கிடைத்த வெற்றி

manoதோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியென அதன் தலைவரும், தேசிய நல்லிணக்க அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.தாம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர் வழங்கிய உறுதிமொழியை எப்போது நிறைவேற்றப் போகின்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோட்டத் தொழிற் சங்கங்களுக்கும் – முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான சம்பளம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியதோடு அதன் பின்னர் இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இதுவரை வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அண்மையில் புறக்கோட்டையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இது குறித்து பேச்சு நடத்தியிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2,500 ரூபாவை வழங்க முன்வந்தனர்.

இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த இடைக்கால வெற்றியென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,

தோட்டத் தொழிலாளர்களின் நிரந்தர சம்பள உயர்விற்கான ஓர் அடையாளமாக இதனைக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply