சென்னை அருகே மாயமான விமானத்தை தேடும் பணியில் மேலும் 2 அதி நவீன கப்பல்கள்

indian airசென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 22-ந் தேதி அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானப்படை விமானம் நடுவானில் பறந்த போது திடீர் என்று மாயமானது. அதில் பயணம் செய்த 29 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அந்த விமானத்தை தேடும் பணியில் கடற்படை கப்பல்கள், விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதில் விமானம் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மாயமான விமானத்தில் இருந்து சிக்னல்கள் வருகிறதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் கறுப்பு பெட்டியில் இருந்தோ அல்லது அவசர கால கண்காணிப்பு கருவிகளில் இருந்தோ எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் விமானம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் மாயமான விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.

விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. விமானம் மாயமான போது அதன் சிக்னல்கள் அமெரிக்காவின் அதிநவீன செயற்கை கோள்களில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் விமானம் சென்ற பாதையை கணிக்க முடியும் என்று பாராளுமன்றத்தில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இதற்கிடையே மாயமான விமானத்தை தேடும் பணியில் மேலும் 2 அதி நவீன கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகிறது. இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் சமுத்திரா ரத்னாகர் கப்பல் மங்களூரில் இருந்தும், கடற்படையின் ஐ.என்.எஸ். நிருபக் கப்பலும் சென்னை வருகிறது.

இந்த கப்பல்களில் விமானத்தின் சிக்னல்களை கண்டுபிடிக்கும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் சென்ற விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா? என்று தேடி படம் பிடிக்கும் நீர் மூழ்கி கேமராக்கல் மூலமும் தேட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வருகிற 3-ந் தேதி சாகர் நிதி என்ற அதிநவீன கப்பலும் தேடும் பணிக்கு வருகிறது.

இந்த நிலையில் மரைன் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் படி ராமேசுவரம் அருகே பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மாயமான விமானத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

மண்டபத்தில் இருந்து 2 அதிநவீன ரோந்து படகில் இந்திய கடல் எல்லை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply