பூரண குணமடைந்த முதல்வர் ஜெயலலிதா இன்று வீடு திரும்புகிறார்

jeyaமுதல் – அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு காய்ச்சல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் காய்ச்சல் குணமானது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார்.2 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல் நிலையை டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள். நேற்று காலை முதல் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வழக்கமான உணவை சாப்பிட்டார்.

நேற்று மாலை சிகிச்சை முடிந்து ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு சில முடிவுகள் மட்டுமே வந்துள்ளது. மற்ற அனைத்து முடிவுகளும் வருவதற்கு 48 மணி நேரம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இன்று மொத்த பரிசோதனை முடிவுகளும் வந்து விடும். அதன் பிறகு அவர் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என தெரிகிறது. இன்று மாலையே ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா 2-வது தளத்தில் உள்ள அறையில் தங்கியுள்ளார். அங்கிருந்தவாறு தனது அலுவல் பணிகளை கவனிக்க தொடங்கினார்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பிரதமர் மோடி, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவர் குணம் அடைய வேண்டி வாழ்த்து செய்தி வெளியிட்டனர்.

அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

வெளியூர்களில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் வந்து குவியத் தொடங்கினர். இதனால் ஆஸ்பத்திரி அமைந்துள்ள கிரீம்ஸ் சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணம் அடைந்ததாக ஆஸ்பத்திரியில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் சொந்த ஊர் திரும்பினார்கள்.

இன்று காலை முதல் ஆஸ்பத்திரியில் தொண்டர்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. என்றாலும் ஆஸ்பத்திரியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சர்வமத பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply