ஜப்பான் நாட்டில் மிகச்சிறிய ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி

ஜப்பான் நாட்டில் மிகச்சிறிய ராக்கெட் மூலம் மிகச்சிறிய செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளியில் செலுத்த முயற்சி செய்யப்பட்டது. இதற்காக 9.5 மீட்டர் நீளம் கொண்ட ஒரு ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. 35 செ.மீ. மட்டுமே உயரம் கொண்ட ஒரு செயற்கைக்கோளும் உருவாக்கப்பட்டது. கடந்த வாரமே இதை விண்வெளியில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த முயற்சி தள்ளிப்போனது.

 

இந்த நிலையில், தென்மேற்கு ஜப்பானில் உள்ள உச்சிநவுரா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு, சிறிய செயற்கைக்கோளுடன், சிறிய ராக்கெட் விண்வெளியில் செலுத்தப்பட்டது.

 

ஆனால் சற்றும் எதிர்பாராத விதத்தில் அதன் தகவல் தொடர்பு அமைப்பு செயலற்றுப்போனது. இதையடுத்து அந்த ராக்கெட், கடலில் போய் விழுந்தது.

 

இது குறித்து ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘ஜாக்ஸா’வின் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்காயுகி டொமோபீ கருத்து தெரிவிக்கையில், “இந்த ராக்கெட் திட்டத்தில் பல ஜப்பானிய நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. இந்த நடவடிக்கை ஒரு சிறிய படிதான். இன்னும் பல முட்டுக்கட்டைகளை நாங்கள் தாண்டிச்செல்ல வேண்டி உள்ளது. ஒரு முறை இத்தகைய ராக்கெட்டை ஏவுவது வெற்றி கண்டுவிட்டால், ராக்கெட் ஏவுவதற்கான செலவுகளையும், கால அளவையும் வெகுவாக குறைக்க முடியும்” என கூறினார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply