ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஏ.டி.எம். மெஷின்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே செயல்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
அதுவும் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பின்னர் அது ரூ.2500, ரூ.4500 என படிப்படியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பணத்தட்டுப்பாடு ஒரளவு சீரடைந்ததையடுத்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இனி ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply