2ஜி வேகத்திலும் வீடியோ கால் செய்ய முடியும்: புதிய ஸ்கைப் செயலி அறிமகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இந்தியாவில் ஸ்கைப் லைட் செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி குறைந்த இண்டர்நெட் வேகத்திலும் சீராக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 2ஜி கனெக்ஷன் பயன்படுத்துவோரும் வீடியோ கால், குறுந்தகவல், ஆடியோ கால் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஸ்கைப் லைட் செயலியை டவுன்லோடு செய்ய முடியும். 13 எம்பி அளவு கொண்ட ஸ்கைப் லைட் செயலி மற்ற எஸ்எம்எஸ் மற்றும் கான்வெர்சேஷன்களை ஒரே டேபில் இயக்க முடியும். இது தவிர டயலர், காண்டாக்ட் மற்றும் பாட் உள்ளிட்ட டேப்களும் இருக்கின்றன.

செயலியை டவுன்லோடு செய்ததும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது ஸ்கைப் ஐடி மூலம் செயலியை பயன்படுத்த துவங்கலாம். ஏற்கனவே வாட்ஸ்அப், ஹைக் உள்ளிட்ட செயலிகள் பெரும்பலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய ஸ்கைப் லைட் பதிப்பு 2ஜி கனெக்ஷனிலும் சீராக இயங்கும் என்பதால் இந்தியாவில் இந்த செயலி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply