வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, பிரதமர் பயோலோ ஜென்டிலோனி ஆகியோரை சந்திக்கிறார்.

இதனிடையே, வாடிகன் நகர் சென்ற டிரம்ப் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். தன்னை சந்திக்க வந்த டிரம்பை போப் கை குழுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் பொதுவான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். சுமார் இருபது நிமிடம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா மற்றும் மகள் உடன் சென்றனர்.

போப் ஆண்டவர் பிரான்சிசை அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது தான் முதன் முறையாக சந்திக்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply