குடும்பத்துடன் இந்தியா வாருங்கள்: டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு

இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, டிரம்பை குடும்பத்துடன் இந்தியாவிற்கு வருமாறு, மோடி அழைப்பு விடுத்தார். இது குறித்து டிரம்பிடம் மோடி கூறுகையில், “நீங்கள் (டிரம்ப்) குடும்பத்துடன் இந்தியாவிற்கு வர அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உங்களை இந்தியாவில் வரவேற்கவும், விருந்து வழங்கவும் எனக்கு வாய்ப்பு வழங்குவீர்கள் என நம்புகின்றேன்,” என பேசினார்.

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே நீண்ட நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருவரும் நீண்ட நேரம் தனியாகவும் பேசிக்கொண்டார்கள்.

அமெரிக்கா மற்றும் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தியா மற்றும் அமெரிக்கா எப்போது நெருங்கிய நட்புறவு மற்றும் மரியாதையை கொண்டிருக்கும் என கூறினார் டொனால்டு டிரம்ப்.

இந்தியாவில் உலகளாவிய தொழில் முனைவோர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்கு வருகை தரும் அமெரிக்க குழுவிற்கு தலைமை ஏற்று இந்தியாவிற்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் மகள் இவாங்காவிற்கு பிரதமர் மோடி சிறப்பு அழைப்பை விடுத்து உள்ளார்.

அதற்கு பதிலளித்து பேசிய டொனால்டு டிரம்ப், “உங்களுடைய அழைப்பை இவாங்கா ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றேன்,” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply