துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கையா நாயுடு மத்திய மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா

தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வெங்கையா நாயுடுவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இதனை அறிவித்தார்.

இதனையடுத்து, தான் தற்போது வகித்து வந்த மத்திய நகர்புற அமைச்சகம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரியாக பதவியை வெங்கையா நாயுடு ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளை காலை 11 மணிக்கு அவர் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். வெங்கையா நாயுடுவுக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித்தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply