நல்லாட்சி அரசாங்கம் எதுவரை? இருபெரும் கட்சிகளிடையே கருத்து முரண்பாடு

நல்லாட்சி அரசாங்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா ? என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி, அரசாங்கத்தின் முழுமையான காலத்தை 2020 வரை இரு கட்சிகளும் இணைந்து கொண்டு செல்ல வேண்டும் என ஐ.தே.க.யின் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இரு கட்சிகளின் உடன்படிக்கையின் படி, எதிர்வரும் டிசம்பர் 31 வரை இந்த அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும் என ஐ.ம.சு.மு.யின் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இரு கட்சிகளிலுமுள்ளவர்கள் கருத்து முரண்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இரு கட்சிகளும் நாளை ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் கூடி ஆராயவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply