தினகரன் ஆதரவு எம்.பி வசந்தி முருகேசன் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு

அதிமுகவின் பிரதான அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், டிடிவி அணியினர் தனித்து செயல்படுகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசை வீழ்த்தப் போவதாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.யான வசந்தி முருகேசன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

தென்காசி தொகுதி எம்.பி.யான வசந்தி முருகேசன் இன்று காலை கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். வசந்தி முருகேசன் அணி மாறியதால் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

ஏற்கனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான ஜக்கையன் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு எம்.பி. முதல்வர் அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply