மீண்டும் விரிவுரைகளில் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீண்டும் எதிர்வரும் 20ம் திகதி விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஜனவரி முதல் மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இந்தநிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தீர்வினை கருத்தில் கொண்டு எதிர்வரும் 20ம் திகதி முதல் விரிவுரைகளில் கலந்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளதாக, ரயன் ஜெயலத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சயிட்டம் தொடர்பான போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இணங்கிய விடயங்களை செயற்படுத்தாவிடில் மீண்டும் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply