அமெரிக்காவை தாக்கும் திறன்பெற்ற நீண்டதூர ஏவுகணை தயாரிக்க வடகொரியா மீண்டும் திட்டம்

ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை மீறி வடகொரியா தொடர்ந்து நீண்டதூர ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதித்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் வடகொரியா குவாசாங்–14 என்ற நீண்டதூர ஏவுகணையை சோதித்தது.

ஐ.சி.பி.எம். எனப்படும் கண்டம் விட்டு கண்டம் செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது என கருதப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிர போர்ப்பதற்றம் நிலவியது. ஆனாலும் தனது பிடிவாதத்தை வடகொரியா நிறுத்தவில்லை.

அமெரிக்காவை தாக்க வல்ல நீண்டதூர ஏவுகணையை மீண்டும் தயாரிக்க அது திட்டமிட்டு வருவதை தென்கொரிய உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது. ஐ.சி.பி.எம். ஏவுகணையை இந்த ஆண்டு வடகொரியா தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

இதைப்போல வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்களமான ‘புங்கை–ரி’, எந்த நேரத்திலும் நடைபெறும் மற்றொரு சோதனைக்கு தயாராவதாக கூறியுள்ள அந்த உளவு நிறுவனம், எனினும் அணு ஆயுத சோதனைக்கு உடனடி வாய்ப்பு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply