ரூ.7 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

வெயன்கொடை – உடுகம்பல பகுதியில் சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் வசம் இருந்து 73 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இவரை மேலதிக விசாரணைகளுக்காக வெயன்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply