அரசாங்கமொன்று இருக்கிறதா? நாடு செயலிழந்துள்ளது : மஹிந்த

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், கயிறிழுப்புக்களே இடம்பெற்று வருவதாகவும், நாட்டு மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அரசாங்கமொன்று உள்ளதா? இல்லையா? என்பதைக் கூட நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. பிரதமர் பதவி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. நாட்டின் மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இவர்கள் என்னதான் செய்கின்றார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் குறைபாடு இருப்பதையே இந்நிலைமை எடுத்துக் காட்டுகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கியுள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பேச்சுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு, தேர்தலின் பின்னர் இன்னும் கயிறிழுப்புக்கள் தான் இடம்பெறுகின்றன. எந்தப் பக்கத்திலும் பாதிக்கப்படுவது இந்நாட்டின் அப்பாவிப் பொது மக்கள் மாத்திரமே தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply