மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதை இலக்காகக் கொண்டு அது தொடர்பான சாத்தியப்பாட்டை ஆராயும் உயர் மட்டக்கலந்துரையாடல் இன்று(24.05.2010) மன்னாரில் இடம் பெற்றிருக்கின்றது. மன்னாரின் மாந்தை மேற்கு மடு மற்றும் முசலி பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வருபவர்களில் கனிசமானோர் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »















