உக்ரைன் வழியே ஸ்லோவேக்கியாவிற்கு மீண்டும் ரஷ்ய எண்ணெய் விநியோகம்
உக்ரைன் வழியாக ட்ரூஸ்பா குழாய் மூலம் ஸ்லோவேக்கியாவிற்கு மீண்டும் ரஷ்யா எண்ணெய் விநியோகம் மீண்டும் துவங்கி உள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 5 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடம்,உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரி, ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ட்ரூஸ்பா குழாய் மூலம் உக்ரைன் வழியாக எண்ணெய் விநியோக்கப்படுகிறது. கடந்த ஜனவரியில் எண்ணெய் குழாயில் சேதம் ஏற்பட்டதின் காரணமாக எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டன. குழாய் சேதத்திற்கு,உக்ரைன் தான் காரணம் என்று ஹங்கேரி,ஸ்லோவேக்கியா நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் இதனை மறுத்த உக்ரைன் ரஷ்யாவின் டிரோன் தாக்குதலால் குழாய் சேதமடைந்தது என்று தெரிவித்தது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த ஹங்கேரியின் தேசியவாதப் பிரதமர் விக்டர் ஆர்பன் , குழாய் பழுதுபார்ப்புப் பணிகளை உக்ரைன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply