எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
April 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
April 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு
http://www.srilankanelections.com/results/results-main.shtml
April 5th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

“தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்தால் பின் விழைவுகளை சந்திக்க வேண்டிவரும்” என்று சண்டியரின் சண்டித்தனத்தையிட்டு யாரும் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. அவர் குறிப்பிட்டது ‘பிராண வாயு’வை. இதைத்தவிர்ப்பதற்கு யாரும் அவருக்கு பின்பக்கமாக நிற்காமல் விட்டால் சரிதானே! இந்த கோமாளி இப்படியென்றால்: Read the rest of this entry »
March 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலானது பலதரப்பினருக்கும் ஓர் வித்தியாசமான பாடத்தைப் புகட்டியுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் அரசாங்கத்தினருக்கு தமது வாக்குகளை வழங்காது எதிர்க்கட்சியினர்களுக்கு வழங்கியமையானது அரசின் மீது மக்களுக்கு இருந்துவந்த அதிருப்தியினை வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றது. Read the rest of this entry »
March 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
கஞ்ஞா போதைப் பொருளை சிறைச்சாலை சிறைக்கூடத்திற்குள் எடுத்துச்சென்றார் எனும் குற்றச்சாட்டின் பெயரில் மன்னாரில் கைது செய்யப்பட்ட இளைஞனை தடுப்புக்காவலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். மன்னார் சிறைச்சாலை சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவரை சந்திப்பதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தபட்ட போதே குறித்த இளைஞரிடமிருந்து கஞ்ஞா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »
March 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கூட்டமைப்பின் வேட்பாளர்களைச் சாடி துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் வன்னி மாவட்டம் என்று முகவரியிட்டு இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் உள்ள சாராம்சம்:- Read the rest of this entry »
March 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் தலமையிலான ஆயர்களின் உயர்மட்டக்குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேசம் உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் விசேட செயலனியின் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையிலேயே இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் மேற்படி பிரதேசங்களுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு அப்பிரதேசங்களின் இயல்பு நிலை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். Read the rest of this entry »
March 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சூடு இன்னும் ஆறவேயில்லை அதற்குள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வந்துவிட்டது. இலங்கை வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு பெரும்மலவிலான அரசியல் கட்சிகளும் சுயேற்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. ஏறத்தாழ 196 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 7620 பேர் அரசியல் குளத்தில் நீச்சல் அடிக்க குதித்துள்ளனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் இன்மையினால் வந்த தையிரியம் போலும் தெரிகின்றது. Read the rest of this entry »
March 6th, 2010 admin Posted in TELOnews No Comments »
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலை ஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ‘மர்கஸூஸ் ஸலாமா’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள விசேட கருத்தரங்கமும் சொற்பொழிவு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றன.
இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக இந்தியாவின் பிரபல எழுத்தாளரும் விமர்சகருமான பேராசிரியர் அ. மார்க்ஸ் கலந்து கொள்ளவுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மு.ப 9 மணி முதல் பி.ப. 2 மணி வரை சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்கா நிலையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ‘முஹம்மது நபி – சமூக அரசியல் ஆளுமை’ எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். Read the rest of this entry »
March 5th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒலி வானொலி (ரிஆர்ரி தமிழ்அலை) தற்போது புதிய அலைவரிசையில் ஒலிபரப்பாகிவருகின்றது. சன் ரிவி ஒளிபரப்பாகும் யூரோபேர்ட் சட்டலைற்றில் (9பாகை) ஒலிபரப்பாகும் இந்த வானொலி 11919 V, S/R:27500 FEC : 3/4 என்ற அலைவரிசையில் டான் தமிழ் றேடியோ என்ற பெயரில் ஒலிபரப்பாகின்றது. Read the rest of this entry »
March 4th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
கனடிய தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம் வேண்டுகோள்.
இலங்கையில் 2010 ஜனவரி 26ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 1948ல் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நாடுகளில் ஒன்று என்ற வகையில், இத்தேர்தல் இலங்கை மக்களுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் உருவத்தில், இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் ஒரு சூழ்நிலை உருவான போதும், நாட்டு மக்களில் பெரும்பாலோர் எடுத்த, புத்திசாலித்தனமானதும், தீர்க்கதரிசனமிக்கதுமான முடிவால், அவர் தோற்கடிக்கப்பட்டு, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டமை, நமது நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருந்த அசையாத பற்றுறுதியை எடுத்துக்காட்டியது. Read the rest of this entry »
March 1st, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பூனகரி பகுதியில் சிவில் நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு புதிய பொலிஸ் நிலையம் ஒன்று பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. வன்னிப்பிரதேசம் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருப்பதையடுத்து அப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கை அமுல்ப்படுத்தும் முகமாக அரசாங்கம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »
February 14th, 2010 admin Posted in TELOnews No Comments »
இலங்கையில் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றத்தின் பின் நிகழும் ஏழாவது பாராளுமன்றத்துக்காக தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார். Read the rest of this entry »
February 12th, 2010 admin Posted in TELOnews No Comments »
பிபிசி-தமிழோசை ஒலிபரப்பானது நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (எஸ்எல்பிசி) ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது, சில வருடங்களுக்கு முன், பல்வேறு காரணங்களினால் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிசி-தமிழோசை ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. Read the rest of this entry »
February 12th, 2010 admin Posted in TELOnews No Comments »
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டி கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் லியம் பொக்ஸ் இவ்வார இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »