இந்தியாவில் 20 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு : 24 மணி நேரத்தில் 886 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 13.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 6.07 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 41,585  பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply