மட்டக்களப்பில் பாரிய விபத்து ஒருவர் ஸ்தலத்திலேயே பலி
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிக்குடி பகுதியிலிருந்து மட்டக்களப்புப் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிக்குடி பகுதியை நோக்கிச் சென்ற காரும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு பன்குடாவெளியைச் சேர்ந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply