அங்கம்பிடிய மேம்பால நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதமர்

அங்கம்பிடிய மேம்பால நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதமர்

அங்கம்பிடிய, 9வது ஒழுங்கை மற்றும் பாடசாலை வீதியை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை ​நேற்று (15) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உயர் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மேம்பாலம் நிர்மாணப் பணிகளை விரைவில் நிறைவு செய்வது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அங்கு கூடியிருந்த மக்களுடன் பிரதமர் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply