விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயார்
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தயாரென பொருளாதார மறுசீரமைப்பு, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாயம் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறினார்.
வேலைத்திட்டத்துடன் கிராமத்திற்கு எனும் தொனிப்பொருளிலான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கண்டி மாவட்டத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை பொல்கொல்லயில் நடைபெற்றது. இதன் போதே பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள்; இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply