இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் மந்திரி பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது- பாகிஸ்தான் மந்திரி பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி 2 நாள் அமீரக சுற்றுப்பயணத்தில் நேற்று முன்தினம் துபாய் வந்தார். அப்போது அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சார்பில் துணை அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று அபுதாபிக்கு சென்றார். அங்கு பாகிஸ்தான் நாட்டின் முக்கிய வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக இந்தியா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து எங்கள் உளவுத்துறையின் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இந்த பிரச்சினை தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எங்களிடம் நட்புறவாக உள்ளவர்களிடம் இருந்து தகவல்களை பெற முயற்சித்துள்ளதும் எங்களுக்கு தெரியும்.

இந்தியா உள்நாட்டில் அதிகரித்து வரும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த தவறான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது டெல்லி பிளவுபட்டு கிடக்கும் தேசத்தை ஒன்றிணைக்க பாகிஸ்தானை தாக்கி கவனத்தை திசை திருப்ப விரும்புகிறது.

கடந்த நவம்பர் 14-ந் தேதி அன்று பாகிஸ்தான் சர்வதேச ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆவணத்தின் மூலம் இந்தியாவின் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது. அதில் பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி அளிப்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

பாகிஸ்தானை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் தொடங்கிய போலி வலைத்தளங்கள் மற்றும் போலி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply