சிறுவர்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்த 10 பேரை தேடி பொலிஸார் தீவிர நடவடிக்கை
சிறுவர்களை வைத்து ஆபாச படமெடுத்து அவற்றை இணையத்தில் பதிவேற்றிய 10 சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முகநூல் ஊடாக போலி கணக்கு தொடங்கி இவ்வாறு சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய ஒருவர் மொனராகலை – படல்கும்புர பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர் செய்த பின் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சந்தேகநபர் சுமார் 500ற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களை பதிவேற்றியுள்ளதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ஆபாசக் காணொளிகளை இணையத்தளங்களில் பகிர்ந்த மேலும் 10 பேரை அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனைவரும் அடுத்த வாரமளவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply