சிவாஜி கணேசன் பிறந்தநாள் : மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறு மேம்பாலம் அருகே உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சிவாஜி கணேசனின் மகன்களான நடிகர் பிரபு, ராம்குமார் ஆகியோருடன் முதலமைச்சர் பேசினார்.

மணிமண்டபத்தில் உள்ள நடிகர் சிவாஜியின் புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சிவாஜி கணேசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply