டீக்கடை நடத்தி வரும் வயதான கேரள தம்பதி 25 நாடுகளுக்கு சுற்றுப் பயணம்

கேரளாவைச் சேர்ந்த கே.ஆர். விஜயன் தனது மனைவியுடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வருகிறார். இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். தற்போது அவர்களது பேரனையும் அழைத்துச் செல்கிறார்களாம்.

கே.ஆர். விஜயன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பரில் வெளிநாடு சென்றிருந்தோம். அதன்பின் தற்போது செல்கிறோம்’’ என்றார்.

அவரது மனைவி மோகனா, ‘‘2007-ல் இருந்து நாங்கள் பயணத்தை தொடங்கினோம். இதுவரை 25 நாடுகளுக்கு சென்றுள்ளோம். ரஷியா நாங்கள் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் 26-வது நாடாகும் . சுவிட்சர்லாந்து எனக்கு பிடித்தமான நாடு. நாங்கள் கடந்த முறை அங்குதான் சென்றிருந்தோம்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply