பெல்ஜியத்தில் 2 நீர்யானைகளுக்கு கொரோனா

2 ஆண்டுகளாக மனித குலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் உயிர்கொல்லி கொரோனா வைரஸ் நாய், பூனை ஆகிய செல்ல பிராணிகளையும், சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை. 

அந்த வகையில் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள பழமையான உயிரியல் பூங்கா ஒன்றில் 2 நீர் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த 2 நீர்யானைகளுக்கும் கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு தொற்று இருப்பது உறுதியானதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply