ஜனாதிபதி செயலாளர் பதவி விலகினாரா?

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நீர்ப்பாசன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக ஜயசுந்தர பதவி விலகத் தயாராகி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தபோதிலும், இத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜயசுந்தர ஒருபோதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனியாக விட்டுவிடமாட்டார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில், பி.பி. ஜயசுந்தர பதவி விலகுவார் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என பல்வேறு வதந்திகள் வெளியாகின. நாமும் அவ்வாறான செய்திகளை வெளியிட்டோம். ஆனால் அதில் எதுவுமே உண்மை இல்லை இன்றும் பிபி. ஜயசுந்தர தனது பதவியை வகிக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply