தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் : ஜெலன்ஸ்கி உறுதி

உக்ரைன் மீது ரஷியா 118-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் நடவடிக்கைகளை ரஷியா இந்த வாரம் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள பாக்முட் (Bakhmut) நகரத்து மக்கள் ஏவுகணைகளின் சத்தங்களுக்கு நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர அன்றாட் பணிகளை மேற்கொள்ள் விரும்புகின்றனர் ரஷிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சிவியரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே பாக்முட் நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏவுகணைகளின் சத்தங்கள் அவ்வப்போது அங்கு கேட்டுக்கொண்டிருப்பதற்கு மத்தியில் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து வியாபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ். தனது பத்திரிகையில் அதிபர் புதின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் டிமிட்ரி, நாட்டில் பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆவார். இதற்காக அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 89 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர்களுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க டிமிட்ரி முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்க பதக்கம் ஏலம் விடப்படுவதாகவும், அதில் கிடைக்கும் தொகை நேரடியாக யுனிசெப் அமைப்புக்கு செல்லும் எனவும் டிமிட்ரி அறிவித்துள்ளார். பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply