கூட்டணியில் குழப்பம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் நப்தாலி பென்னட் முடிவு
இஸ்ரேலில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அக்கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி, அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.
அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றது. எனினும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. எம்.பி.க்கள் பலர் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அவர்களின் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்று அரசை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனா். குழப்பத்தை சரிசெய்து கூட்டணியை நிலைத்திருக்க செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த நப்தாலி பென்னட் முடிவு செய்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மசோதா நிறைவேற்றப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது, அந்நாட்டில் 3 ஆண்டுகளில் நடக்கும் 5-வது பொதுத்தேர்தலாக அமையும். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் தற்போதைய வெளியுறவு மந்திரி யாயிா் லாபிட் தேர்தல் வரை இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply