தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்ட விதம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் முறைப்பாடு வழங்கி உள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன .

நாளைய தினம் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடியவர்கள் தமது நகைகள் மற்றும் பணத்தில் அவதானம் தேவை என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply