நைஜீரியாவில் சோகம் பஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் தென்கிழக்கே உள்ள ஒயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் காரும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கார் மற்றும் பஸ்சுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply