நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது
நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று கட்டடத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.எவ்வாறாயினும் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசால் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோர் கட்டடத்தைப் பார்வையிட கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி, கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கல்விச் சுற்றுலாவாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்ததாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply