இலங்கையில் பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவில் கைது
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இலங்கையர்கள் குழுவொன்று சட்டவிரோதமான முறையில் பிரவேசித்துள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் 08 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்களில் இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவர் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவரான சந்திரகுமார் என்பவர் கிளிநொச்சி பிரதேசத்தில் மக்களைக் கொலை செய்தல், நகைக்கடைகளில் கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் கிருபாகரன் எனவும், அவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசித்த நபரொருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வந்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply