சாண்ட்விச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்வீச் தீவு அமைந்து உள்ளது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீவு அமைந்து உள்ளது. எனினும் நிலநடுக்கம் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்களும் உடனடியாக வெளிவரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply