ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது

ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை வழங்கியதாகவும், அவர் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக கைதாகி பிணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபருக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரிடம் நீதிவான் வினவியதோடு, சந்தேகநபர் அதனை முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply