கனடாவில் துணிகரம் சீக்கிய இளம்பெண் சுட்டு கொலை
கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர் (21) என்ற சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் கவுர் படுகாயம் அடைந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றனர். பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த அவரை படுகாயங்களுடன் கண்ட போலீசார், உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்துள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இது திட்டமிட்ட படுகொலை என சந்தேகிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply