கடந்தகாலத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தை வெல்ல முடியது : அமைச்சர் டக்ளஸ்

கடந்தகாலத்தை நினைவூட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலத்தை வெல்ல முடியது அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு தோல்வி கண்டது தமிழ் தலைமைகளே அன்றி தமிழ் மக்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்தகாலத்தை தொடர்ந்தும் நினைவூட்டிக் கொண்டிருப்பதால் எதிர்காலத்தை வெல்ல முடியது என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்த அமைச்சர் மன்னார் உதயபுரம் குடியிருப்பு பகுதியில் மக்கள் குறைகேள் நிகழ்வின் பின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

கடந்தகால தமிழ் அரசியல் தரப்பினரது தோற்றுப்போன வழிமுறைகளின் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு தோற்றுப்போன இனமாக தமிழ் மக்கள் நினைப்பதை ஏற்க முடியாது.

உண்மையில் மக்கள் தோல்வியடையவில்லை கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகளின் ஆயுத வழியிலான மற்றும் அரசியல் ரீதியான வழிநடத்தல்களே தோற்றுப்போயின, இதுதான் உண்மை.

ஆனால் ஈ.பி.டி.பி ஆகிய நாம் அவ்வாறான தவறான வழிமுறையில் மக்களை வழி நடத்தியது கிடையாது! வழிநடத்தவும் போவதில்லை!

அதுமட்டுமல்லாது எமது அரசியல் கொள்கைகளும்,முன்னெடுக்கும் வழிமுறைகளும் தவறானாதாகவும் தோற்றுப்போனதாகவும் என்றுமே வரலாறும் கிடையாது!

அந்த வகையில் எமது மக்கள் கடந்தகாலத்தை தொடர்ந்தும் கையில் பிடித்துக்கொண்டிராது யதார்த்தத்தை புரிந்துகொண்டு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும்.

அதனூடாகவே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அத்துடன் தற்போதைய சூழலில் எமது அரசியல் உரிமைகளையும், அபிலாசைகளையும் வெற்றெடுக்க தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளது.l

மேலும் கடந்தகாலத்தில் நடந்தவற்றிக்கு யாரையும் குறை கூறிப் பயனும் இல்லை.

இதேநேரம் ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமற்றது என தீர்மானித்துத் தான் நான் 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை ஆரம்பித்திருந்தேன்.

அதையே இன்றும் முன்னெடுத்து வருகின்றேன்.

இதன்மூலம் பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்துவருகின்றது.

இந்த உண்மை நிலையை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் தமது அரசியல் வழிமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

அந்த வகையில் எமது மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சார் பிரச்சினைகளை மட்டுமல்லாது அன்றாட பிரச்சினைகளுடன் அபிவிருத்தியையும் வெற்றிகொள்ள
நாம் முன்னெடுக்கும் தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும்.

அதன் வழியிலேயே மக்களாகிய உங்களது முன்னெடுப்புக்களும் எதிர்காலத்திற்கு சிறந்தது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply