ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு பலஸ்தீனக் குழந்தை சாவு : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கவலை தெரிவித்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. இதுநாள்வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட,உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும் தான். அத்துடன் நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழக்கின்றனர் என்றும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply