புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சஹ்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கவில்லை :டிரான் அலஸ்

பயங்கரவாதி சஹ்ரானுடன் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாக எப்.பி.ஐ.உட்பட சர்வதேச விசாரணைகளிலும், குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளிலும், ஆணைக்குழு விசாரணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொய்யான கருத்துக்களை குறிப்பிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் சமர்ப்பித்த பதில் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொலைபேசியில் அதிகளவில் தொடர்பு கொண்ட நபர் புலனாய்வு அதிகாரி என எப்.பி.ஐ.வழங்கிய ஐ.பி. முகவரியின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2019.04.21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் என்ற பயங்கரவாதியுடன் தொலைபேசி ஊடாக புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தொடர்பு கொண்டிருந்ததாக எப்.பி.ஐ.உட்பட சர்வதேச விசாரணைகளிலும்,குற்றப்புலானாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளிலும்,ஆணைக்குழுக்களில் விசாரணைகளிலும் அறிக்கையிடப்படவில்லை.ஆகவே பொய்யான கருத்துக்களை இனியேனும் குறிப்பிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச விசாரணை முகவர் ஊடாக கட்டார் இராச்சியத்தில் இருந்த மொஹமட் சஹ்ரான் பஸ்ருல் ரஹ்மான் என்ற இலங்கையர் தொடர்பான சமூக வலைத்தள கணக்கு தொடர்பில் 2019.02.11 ஆம் திகதி அறிக்கையிடப்பட்டது.அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சமூக வலைத்தளத்தில் தொடர்புக் கொண்டுள்ளதாகவும்,உரிய தகவல்கள் அரச புலனாய்வு பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன்,உலகில் உள்ள புலனாய்வு பிரிவு செயற்படும் வகையில் இந்த நபரின் பின்னணி மற்றும் செயற்பாடு தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

புலனாய்வு விசாரணைக்கு அமைவாக இந்த நபர் மாத்தளை பகுதியில் வசித்ததாகவும்,ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளுடன் செயற்பட்டதாகவும் அவரது செயற்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க புலனாய்வு பிரிவு விசேட கவனம் செலுத்தியது.இவ்வாறான நிலையில் 2019.04.16 ஆம் திகதி சஹ்ரான் இலங்கைக்கு வருகை தந்துள்ளான்.இவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரச புலனாய்வு பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.

மொஹமட் சஹ்ரான் பஸ்ரூல் ரஹ்மான் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கும்,ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னிலையாகி விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் இலக்கம் பி.13100.19 கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

2029.04.21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் என்ற பயங்கரவாதியுடன் தொலைபேசி ஊடாக புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தொடர்பு கொண்டிருந்ததாக எப்.பி.ஐ.உட்பட சர்வதேச விசாரணைகளிலும்,குற்றப்புலானாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளிலும்,ஆணைக்குழுக்களில் விசாரணைகளிலும் அறிக்கையிடப்படவில்லை.ஆகவே பொய்யான கருத்துக்களை இனியேனும் குறிப்பிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply