ரஃபா நகர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு பாலஸ்தீன் அமெரிக்காவிடம் வேண்டுகோள்

ஒரு மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள தெற்கு காசா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு பாலஸ்தீன் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன்படி, ரஃபா நகர் மீதான தாக்குதலை தடுக்கும் ஒரே நாடு அமெரிக்கா மாத்திரமே என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணயக்கைதிகள் ஒப்பந்தம் இருக்கும் நிலையில், இஸ்ரேலின் ஊடுருவலை நிறுத்த முடியுமென அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, காசாவில் ஹமாஸ் அமைப்பினர் அழிக்கப்பட வேண்டும் எனவும், பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளை, போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஹமாஸ் விரும்புகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும், இஸ்ரேல் என்ன செய்யப்போகிறது என்பது குறித்து பாலஸ்தீன் அச்சம் கொண்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலிய இராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி போரைத் தொடரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply