மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்

தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார்.


ஏனைய நாட்களில் கொழும்பு நகரை துப்பரவு செய்யும் 700 தொழிலாளர்களுக்கு மேலதிகமாக மேலும் 300 பேர் இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் மே பேரணிகள் மற்றும் அணிவகுப்புகள் மூலம் கொழும்பில் இன்று குவியும் கழிவுகளை விரைவாக அகற்றுவதே இந்த குழுவின் முதன்மை நோக்கமாகும் என்றும் 1000க்கும் மேற்பட்ட இந்த தொழிலாளர் படை 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அதன்படி மே 2ஆம் திகதி தொழிலாளர் தினத்தின் பின்னர் கொழும்புக்கான சேவைகளை வழங்குவது உட்பட கடமைக்கு வரும் பொது மக்களை தூய்மையான நகரமாக காண கொழும்பு மாநகர சபை தன்னால் இயன்றளவு செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply