இந்தியாவில் வெப்ப அலையால் 9 பேர் பலி

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகரித்த வெப்பம் பதிவாகியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட பாராளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம் 4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர். இதேவேளை, வெப்ப அலை எதிர்வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கிழக்குப்பகுதியில் சராசரி வெப்பநிலை 28.12 செல்சியஸ் (82.61 ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரூர், பரமத்தி, ஈரோடு, திருச்சி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “எல் நினோ தாக்கத்தினால் அதிக வெப்பம் நிலவும். பொதுவாக ஆசியாவில் வெப்பம் மற்றும் வரட்சியா வானிலையும், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply