டயானா கமகே வெளிநாடு செல்ல தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் நகல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வு பணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்தது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply