யாழ். மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply