ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், சமீபத்தில் நாடு திரும்பிய ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 36 போ் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானில் கடந்த 2023 முதல் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், அங்கிருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனா். அவ்வாறு திரும்பிய அகதிகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளனா். இதனிடையே, மற்றொரு சம்பவமாக வெள்ளிக்கிழமை இரவு நூரிஸ்தான் மாகாணத்தில் காா் ஒன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 4 போ் மாயமாகியுள்ளனா்; அவா்களை மீட்புக் குழுவினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply