இலங்கையர் ஒருவருக்கு அபுதாபியில் மரண தண்டனை
கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு அபுதாபி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அலெக்ஷ் ரோஹண என்ற இலங்கை பிரஜைக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபுதாபி சட்டத்திற்கு அமைய குறித்த நபரை சுட்டுக்கொல்லுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2002ம் ஆண்டு ஒருவரை கொலை செய்ததாக அபுதாபி நீதிமன்றில் குறித்த இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த கொலைக்கு நட்டஈடுபெற பிரதிவாதிகள் தரப்பு மறுப்பு தெரிவித்ததை அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply