நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐ.நாவிற்கு விளக்கம்

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.இந்த கருத்துக்களுக்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம், நீதவான்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி கெப்ரியேல் நோவில் கருத்து வெளியிட்டிருந்தார்.

நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கைகளை மீளாய்வு செய்யுமாறு கோரியிருந்தார். நம்பிக்கையில்லா தீர்மான ம் பற்றிய பூரண விபரங்களை அறிந்துகொள்ளாமல் ஐக்கிய நாடுகள் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பூரண விளக்கம் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply