13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது – TNA
13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிப்ன பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களை ரத்து செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தகல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றங்கள் செய்யப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளுக்கு புறம்பானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து பல சந்தர்ப்பங்களில் உறுதிமொழிகளை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக, 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வட மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் நன்மைக்காக அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட்டால் அது ஒட்டுமொத்த தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கு பாதகமானதாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply