மின் கட்டண உயர்வை கண்டித்து :கொழும்பில் இன்று பேரணி

மின் கட்டண உயர்வை கண்டித்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (15) கொழும்பில் இருவேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறவுள்ளன.மின் கட்டண உயர்வை கண்டித்து கொழும்பு கெம்பல் மைதானம் தொடக்கம் கொழும்பு கோட்டே வரை ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.பிற்பகல் 2 மணியளவில் இந்தப் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ளது.
ஜே.வி.பியின் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மத அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் இன்று பேரணியொன்று நடைபெறவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் பேரணியும் போராட்டமும் நடைபெறவுள்ளது.
மாலை 6 மணிக்கு கொழும்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை வரை இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply